எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்துக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்..! - Seithipunal
Seithipunal


மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். மேலூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள் என டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துதொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஜனவரி 07-ந்தேதி நடைபெற்ற பிரமாண்ட போராட்டத்தில் மேலூர் மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். டிசம்பர் 09-ந்தேதி தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றியது.

இருந்தபோதிலும் மத்திய அரசு இந்த திட்டத்தை ரத்து செய்யாமல் அரிட்டாபட்டி பல்லுயிர் சூழல் தளத்திற்கு உட்பட்ட 500 ஏக்கர் நிலத்தை தவிர மீதமுள்ள 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தில் சுரங்கம் அமைக்கப்படுவதற்கு இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் மறுவரையறை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. எனவே பொது மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது.

இந்த நிலையில் டெல்லி சென்ற போராட்டக்குழுவினர், டங்ஸ்டன் கனிம சுரங்கத்தால் மேலூர் வட்டத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும், விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், நிலத்தடி நீர் சீர்கேட்டையும் மத்திய மந்திரி கிஷன் ரெட்டியிடம் விளக்கி கூறினர்.

இதையடுத்து டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். அத்துடன் இன்று அரிட்டாபட்டியில் அவருக்கு பாராட்டு பாராட்டு விழா நடத்தினர். 

இந்த நிலையில் மேலூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சென்னை கிரீன்ஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmers met Edappadi Palaniswami and thanked him for canceling the tungsten mining project


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->