செந்தில் பாலாஜியை துரத்தும் பண மோசடி?! பல லட்சம் சுருட்டி, போலீசில் சிக்கிய தில்லாலங்கடி!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியில் வசிப்பவர் சௌமியா. இவர் பலரிடம் மின்சாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பணமோசடி ஈடுபட்டு தலைமறைவாக இருந்தாக கூறப்படுகிறது. 

தலைமறைவான இடத்தை கண்டறிந்த பாதிக்கப்பட்ட சிலர், அவரை பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த  புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வெளியான முதல்கட்ட தகவலின்படி, அந்த பெண் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது உறவினர் என கூறிக்கொண்டு, அரசு வேலை வாங்கித் தருவதாக திருச்சி கரூர் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

தற்போது, கரூர் குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சுகுமார், நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ், ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.

ஏற்கனவே, அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டு, உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு வழக்கின் உச்சநீதிமன்ற உத்தரவு, தலை மேல் கத்தியாக தொங்கும் நிலையில், தற்பொழுது செந்தில் பாலாஜியின் பெயரைச் சொல்லி தில்லாலங்கடி பெண் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டு இருப்பது, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு தீனி போட்டது போல் அமைந்துவிட்டதாக உடன்பிறப்புகள் புலம்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Forgery lady using dmk minister name for money laundering


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->