தேர்தல் அட்ராசிட்டி... திமுக சார்பில் 500 வீடுகளுக்கு கோழிக்கறி இலவசம்...?! ட்விட்டரில் வைரலாகும் தகவல்..!!
Free chicken meat for 500 houses by DMK in erode east
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் ஆதரவாக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்காக வாக்கு சேகரித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு திமுக நிர்வாகி காரில் இருந்து வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பரிசு டோக்கன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சம்பவம் ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட சில பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு இலவசமாக கோழிக்கறி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிக்கன் கடையிலிருந்து சுமார் 500 வீடுகளுக்கு தலா ஒரு கிலோ கோழிக்கறி வழங்க திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே எதிர்க்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் இது குறித்தான புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேபோன்று பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரும் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்தான தகவலை பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே திமுகவை சேர்ந்த நிர்வாகியின் காரிலிருந்து டோக்கன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது இலவசமாக கோழிக்கறி வழங்குவதாக வெளியான தகவல் ஈரோடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Free chicken meat for 500 houses by DMK in erode east