இதை செய்தால் தான் "மக்களை நேரில் சந்திக்க முடியும்".!! மேயரிடம் குமுறிய திமுக கவுன்சிலர்.!!
gcc dmk councilore said when roads are repaired only we go and meet people
சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சாலைகளை சீர்செய்ய வேண்டுமென சென்னை மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மோசமான சாலைகளை சரிசெய்ய வேண்டும் என்று சென்னை மேயரிடம்சென்னை மனக்காட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்துகின்றனர்.
சென்னையில் உள்ள 5000-க்கும் மேற்பட்ட மோசமான சாலைகள் அனைத்தும் ஜனவரி நடுப்பகுதிக்குள் அதாவது பொங்கலுக்கு முன்னர் சரி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை பெருநகர் நிலைக்குழு (பணிகள்) தலைவரும் திமுக கவுன்சிலருமான என்.சித்ராசு சென்னை மேயர் ஆர்.பிரியாவிடம் வலியுறுத்தினார். இதுகுறித்து பேசிய அவர் “இந்தச் சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க, முதலமைச்சரிடம் எடுத்துரைத்து, அதிக அளவு நிதியைப் பெற வேண்டும். இதை செய்தால் தான் நேரில் சென்று மக்களை சந்திக்க முடியும். சாலைகள் சீரமைக்கப்பட்டால்தான் சென்னையில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற முடியும்,'' என தெரிவித்துள்ளார்.
English Summary
gcc dmk councilore said when roads are repaired only we go and meet people