மாநில அந்தஸ்தை திரும்ப பெறுவதே எனது புதிய கட்சியின் நோக்கம் - குலாம் நபி ஆசாத்!
Ghulam Nabi Azad say about aim of my new party to get back statehood
காங்கிரஸில் இருந்து அண்மையில் விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தைத் திரும்ப பெறுவதே எனது புதிய கட்சியின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் சைனிக் காலனியில் இன்று நடைபெற்ற பேரணியில் குலாம் நபி ஆசாத் பங்கேற்றார். இந்த பேரணியில் காங்கிரஸில் இருந்து விலகிய பல்வேறு முக்கியத் தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியில் பேசிய குலாம் நபி ஆசாத் தெரிவித்ததாவது,
"ஜம்மு-காஷ்மீர் மக்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் தலைவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டதற்கு பின்பு தான் எனது புதிய கட்சியின் பெயரை அறிவிப்பேன்.
எனது புதிய கட்சி ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தைத் திரும்பப் பெறுவதில் முதலில் முக்கியத்துவம் கொடுக்கும். இதன் பின்னர், மக்களின் உரிமைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும்". என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Ghulam Nabi Azad say about aim of my new party to get back statehood