தமிழக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை - ஜி. கே. வாசன் குற்றச்சாட்டு..!
GK Vasan accusated TNgovt does not care about people welfare
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது, "சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால் மற்றும் பால் பொருட்களின் விலையை அதிகரித்து மக்களின் மீது அதிக சுமையை திணித்தது. தற்போது பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் நெய்யின் விலையை உயர்த்தி மக்களின் சுமையை இன்னும் அதிகரித்துள்ளது.
மக்கள் அதிகம் நெய் பயன்படுவார்கள் என்று தெரிந்தே விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் தமிழக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறையில்லை என்பது மிகவும் அப்பட்டமாக தெரிகிறது. இதையடுத்து அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வருகிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு வருடந்தோறும் வழங்கும் பொங்கல் தொகுப்பினை தாமதம் செய்யாமல் விரைவில் வழங்க வேண்டும்.
இந்த தொகுபிற்கான கரும்பு, வெல்லம் போன்ற பொருட்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், மக்களை பாதிக்கும் நெய் விலை உயர்வை தமிழக அரசு கிரும்ப பெற வேண்டும்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
GK Vasan accusated TNgovt does not care about people welfare