#BigBreaking :: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... 16 பேர் கொண்ட பணிக்குழுவை அமைத்தார் ஜி.கே வாசன்..!!
GK Vasan forms election committee for Erode East ByElection
கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக சார்பில் அதன் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. தற்பொழுது நடைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்ததால் மக்கள் நலன் மற்றும் கூட்டணி நலன் கருதி விட்டு கொடுப்பதாக தமாகா தலைவர் ஜி.கே வாசன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக தனது தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்காக 16 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
குறிப்பாக நடைபெற இருக்கின்ற இந்த இடைத்தேர்தலில் தமாகா-அஇஅதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பணியாற்றுகிறது. எனவே தமாகா சார்பில் தேர்தல் பணி குழுவின் நிர்வாகிகளாக 16 பேர் நியமிக்கப்படுகின்றனர்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தேர்தல் பணிக்குழு தலைவராக ஈரோடு மத்திய மாவட்ட தமாகா தலைவர் விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து மாநிலத் துணைத் தலைவர் ஆறுமுகம், மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், கௌதம் உட்பட 16 பேர் கொண்ட பட்டியலை ஜி.கே வாசன் வெளியிட்டுள்ளார்.
English Summary
GK Vasan forms election committee for Erode East ByElection