த.மா.கா முன்னாள் எம்பி ஏ.ஜி.எஸ். ராம்பாபு மறைவு.. ஜி கே வாசன் இரங்கல்.!! - Seithipunal
Seithipunal


மதுரை மக்களவைத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், த.மா.கா வின் பொதுச்செயலாளருமான ஏ.ஜி.எஸ். ராம்பாபு, மறைவிற்கு த.மா.கா வின் தலைவர் ஜி கே வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழகத்தின் மதுரை மக்களவைத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான திரு. A.G.S. ராம்பாபு அவர்களின் திடீர் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

மதுரை மக்களவைத் தொகுதியில் 3 முறை பாராளுமன்ற உறுப்பினராக திரு. ராம்பாபு அவர்கள் ஆற்றிய ஏராளமான பணிகள் தான் இன்றைக்கு மதுரை தொகுதி பல துறைகளில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு அடித்தளமாக அமைந்தது என்பதை குறிப்பிடுகிறேன்.
தமிழகத்தில் மக்கள் தலைவர் மறைந்த ஐயா ஜி.கே. மூப்பனார் அவர்களின் தலைமையை ஏற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியவர். 

பிறகு 1996 ல் ஐயா மூப்பனார் அவர்களின் தலைமையை ஏற்றும், 2014 ல் எனது தலைமையிலும் த.மா.கா விற்கு வலு சேர்த்தவர். தென் மாவட்ட மக்களின் அன்பைப் பெற்றவர். அனைத்து கட்சியினராலும் மரியாதைக்குரியவராக கருதப்பட்டவர். எல்லோரிடமும் அன்பாகப் பழகியவர்.

இளம் வயது முதலே அவர் மேற்கொண்ட இயக்கப்பணியாலும், மக்கள் நலப்பணியாலும் பாராட்டப்பட்ட  நல்ல மனிதர். 60 வயதுடைய திரு. ராம்பாபு அவர்களது மறைவு தனிப்பட்ட முறையிலே எனக்கும், த.மா.கா வுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், த.மா.கா வினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gk Vasan mourns for former MP AGS Rambabu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->