ஆம்பூரில் வாக்காளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சுயேட்சை வேட்பாளர்.!!
gold coin issued by independent candidate
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மாநகராட்சியில் உள்ள 36 வது வார்டு கவுன்சிலர் பதிவிற்கு கம்பிகொல்லை பகுதியை சேர்ந்த மணிமேகலை துரைப்பாண்டி சுயேட்சை வேட்பாளராக தென்னை மரச் சின்னத்தில் போட்டியிட்டர்.
இந்நிலையில், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான பிப்ரவரி 18ஆம் தேதி அன்று நள்ளிரவு மணிமேகலை மற்றும் அவரது கணவர் துரைப்பாண்டி அந்தப்பகுதியில் வீடு வீடாக சென்று தங்க நாணயம் ஒன்றை வழங்கிய, தங்களுக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளனர். ஓம் சக்தி உருவம் பொறித்த அந்த தங்க நாணயத்தை மூன்று நாள் கழித்து பார்க்கும் படியும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பிரச்சனை ஆகும் என தெரிவித்துள்ளனர்.
இதனால்,சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மறுநாள் காலை அடகு கடைக்கு சென்று காண்பித்தபோது, அது பித்தளை நாணயம் என தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பித்தளை நாணயத்தை கொடுத்து தங்களை ஏமாற்றிய வேட்பாளர் மீது புகார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பித்தளை நாணயத்தை வழங்கிய மோசடி செய்ததாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
English Summary
gold coin issued by independent candidate