"கோபாலபுரம் வீடு எங்களோடது." உரிமையுடன் நுழைந்த பெண்மணி.! மு.க.ஸ்டாலின் சர்ப்ரைஸ்.!  - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் இருந்து வந்த ஒரு குடும்பம் கோபாலபுரம் வீட்டில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்தது. 

கலைஞர் வாழ்ந்த காலகட்டத்தில் கோபாலபுரம் வீட்டின் உரிமையாளராக இருந்த சர்வேஸ்வர ஐயரின் பேத்தி சரோஜா சீதாராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வந்தது. கலைஞர் கருணாநிதிக்கு முன் இந்த வீட்டின் உரிமையாளராக இருந்த சர்வேஸ்வர ஐயர் தான் இந்த வீட்டை கருணாநிதிக்கு விற்றார். 

தற்போது, சரோஜா சீதாராமனுக்கு 86 வயது ஆகின்றது. இவருக்கு 17 வயதாகும் போது இந்த வீடு விற்கப்பட்டுள்ளது. அப்பொழுது, அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், கடைசி கோரிக்கையாக சரோஜா இந்த வீட்டில் எனது திருமணம் நடக்க வேண்டும் என்று கருணாநிதியிடம் கேட்டுள்ளார்.

அவரும் அதற்கு சம்மதித்த நிலையில், கருணாநிதி இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். தற்போது, பல ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கோபாலபுரம் வீட்டை பார்க்க வேண்டும் என்று சரோஜா சீதாராமன் ஆசைப்பட்டதாகவும், அதற்கு முதல்வர் ஸ்டாலின் அனுமதி கொடுத்ததாகவும் தற்போது கூறப்படுகிறது. இது குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gopalapuram old owner arrived again


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->