தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்.!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா மீது ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டு உள்ளதாக கூறி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை பத்து முப்பது மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். டெல்லி செல்லும் ஆளுநர்,  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். பிரதமர் நரேந்திர மோடி. உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். 

அப்போது தமிழக நிலவரம் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்திற்கு நீட் விலக்கு  தரக் கோரி தமிழக அரசின் சார்பில் தொடர் வலியுறுத்தல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor RN Ravi Going to Delhi


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->