கருத்து திருடர்களான இவர்களெல்லாம் திரவிடியன் ஸ்டாக் - அண்ணாவை போட்டுத்தாக்கிய ஹெச்.ராஜா! - Seithipunal
Seithipunal


சென்னை : மதுரவாயலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், "ஸ்ரீரங்க கோவில் வாசலில் உள்ள சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும்" என்று, பிரபல திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசி இருந்தார்.

இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளராக இருந்துவரும் கனல் கண்ணனின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பவே, தந்தை பெரியார் திராவிடர் கழகம் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, கனல் கண்ணனை கைது செய்தனர். 

தற்போது நிபந்தையுடன் ஜாமினில் வெளியே வந்துள்ள கனல் கண்ணன், கேரளாவில் நடக்கும் படப்பிடிப்பிறகாக நீதிமன்ற அனுமதியுடன் சென்றுள்ளார்.

இந்நிலையில், இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெறும் பிரதமர் மோடியின் 8 ஆண்டு சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஹெச்.ராஜா, "100% கனல் கண்ணன் பேச்சுக்கு உடன்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்னவர் திருமூலர். ஆனால், அண்ணா சொன்னதாக சொல்கிறார்கள் என்றும், கருத்து திருடர்களான இவர்களெல்லாம் திரவிடியன் ஸ்டாக் என்றும் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

"இந்து சமுதாயம் எந்திரிக்கவில்லை, நாங்கள் சேவல் போல் கூவிக்கொண்டிருக்கிறோம். நாட்டு மக்களுக்கு நம்பிக்கை, தேச பக்தி ஊட்டுபவன் தலைவன்” என்றும் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H Raja speech attack anna


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->