இதோ ஜிலேபி சாப்பிடுங்கள் மோடி - ஹரியானா தேர்தல் எண்ணிக்கையில் காங்கிரஸ் கடும் தாக்கு! - Seithipunal
Seithipunal


ஹரியானாவில்  நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனையொட்டி ஹரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கும்  கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்து 629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட நிலையில், 1,031 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையேயான  தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில், சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், ஆம் ஆத்மி 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.  தொடர்ந்து அடுத்தடுத்த வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.அதன் படி இந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது.

 இதேபோல் பாஜகவும் தனித்து போட்டியிட்ட நிலையில், லோக்தளம்-பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிட்டது.

இந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணத் தொடங்கப்பட்ட நிலையில்,  இன்று மதியம் அல்லது மாலைக்குள் யார் ஆட்சியை பிடித்து முதலமைச்சர் ஆவார் என்பது தெரிந்து விடும். இதற்கிடையே இந்த தேர்தலில் ஓரி சில தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில், பெரும்பான்மையுடன் வெற்றி பிரதமர் மோடிக்கு ஜிலேபி அனுப்பி வைப்போம் என்று  காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Here eat jalebi modi haryana election numbers congress hard attack


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->