பொறியியல் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க உயர்கல்வித் துறை திட்டம் - அமைச்சர் பொன்முடி வெளியிட்ட தகவல் .! .  - Seithipunal
Seithipunal


வேலை வாய்ப்புக்கு ஏற்ப பொறியியல் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க உயர்கல்வித் துறை திட்டமிட்டபடி, பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

அண்மையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும்போது, "காலத்திற்கேற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ள பொறியியல் பாடத்திட்டங்கள் விரைவில் வெளியிடப்படும்" என்று பேசி இருந்தார். 

இந்நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை உறுதி செய்வது தொடர்பாக, நாளை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவிருந்தது. 

ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்ல உள்ளார். இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த பாடத்திட்ட மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மேலும், நாளை நடைபெறவிருந்த துணைவேந்தர்கள் கூட்டம் ஓத்த்திவைக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கான மாற்று தேதி விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Higher Education Department plan to change engineering curricula Info by Minister Ponmudi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->