ஹிஜாப் மாணவி முஷ்கானுக்கு பாராட்டு தெரிவித்த தீவிரவாத அமைப்பு அல்-கொய்தா தலைவன்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் ஆடை குறித்து ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வருகிறது. இதுகுறித்த போராட்டங்களின் போது, ஒரு தனியார் கல்லூரியில் முஸ்கான் என்னும் மாணவி ஹிஜாப் அணிந்து வந்தார்.

இதனை பார்த்த சில மாணவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். அந்நேரம் மாணவி முஸ்கான் பதிலுக்கு, அல்லாஹூ அக்பர் என கோஷமிட்டார்.

இந்த காணொளி சமூகவலைதங்களில் அதிகம் பகிரப்பட்டது. இந்த நிலையில், அல்-கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி வெளியிட்டுள்ள 8 நிமிட காணொளி ஒன்றில், கர்நாடக மாணவி முஸ்கானுக்கு பாராட்டு தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அல் கொய்தாவின் ஷபாப் ஊடகம் வெளியிட்ட காணொளியில், ஹிஜாப் தொடர்பான அடக்குமுறைக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்றும், மாணவி முஸ்கான் காணொளியை சமூக வலைதளங்களில் பார்த்தேன். 

அவரது துணிவு குறித்து அறிந்து உருகினேன் என்று தெரிவித்த அவர், 'இந்தியாவின் உன்னத பெண்' என எழுதப்பட்ட ஒரு போஸ்டருடன் பாராட்டு தெரிவித்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாணவி ஒருவரை தீவிரவாத அமைப்பான அல்-கொய்தா அமைப்பின் தலைவர் பாராட்டி இருப்பதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hijab Issue Al Qaed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->