பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதை அனுமதிக்கலாமா? கடந்த காலங்களில் நீதிமன்றம் கூறியது என்ன தெரியுமா?! - Seithipunal
Seithipunal


கடந்த மாதத் தொடக்கத்தில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசு புதுமுகக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த 12 இஸ்லாமிய மாணவிகளை வளாகத்தில் நுழைய அனுமதித்த கல்லூரி நிர்வாகம்,  வகுப்புகளுக்கு அனுமதிக்க மறுத்ததால் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

இதில், சில மாணவிகள் மட்டும் ஹிஜாப் அணிய அனுமதி கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மத நம்பிக்கைகளையும், அடையாளங்களையும் கடைபிடிக்கும் விஷயத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் எல்லையற்ற சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது. சீக்கியர்கள் தலைப்பாகை அணிந்து கொள்ளவும், கிறித்தவர்கள் சிலுவை அணியவும், இந்துக்கள் பல வகையான திலகங்கள், திருநீறு பூசிக் கொள்ளவும் அனுமதிக்கிறது. 

அதன் தொடர்ச்சியாக இந்த ஹிஜாப் அணிவதை பார்க்க வேண்டும் என்று பலரும் தெரிவிக்கின்றனர். மேலும், கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்க நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்றும் கருத்து கூறுகின்றனர். 

கடந்த காலங்களிலும் பலமுறை கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை அனுமதிக்கலாமா? என்ற சர்ச்சைகள் எழுந்துள்ளது. அப்போது நீதிமன்றங்கள், "எந்த ஆடையும் கற்றலுக்கும், கற்பித்தலுக்கும் தடையாக இருக்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போதுவரை, வகுப்பறைகளைப் பொறுத்தவரை, ஹிஜாப் அடுத்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. ஆசிரியர்கள் மாணவிகளின் முகத்தைப் பார்த்து கற்பிப்பதற்கு வசதியாக ஹிஜாப் முகத்தை மறைக்கக்கூடாது. எனவே முகத்தை மறைக்காமல் தலையை மட்டும் மறைக்கும் ஹிஜாப் அணிவதை அனுமதிக்கலாம் என்று கல்வியாளர்கள் வழிகாட்டி உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hijab issue in karnataka school and college


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->