ஹிஜாப் தடை செல்லும் - கறுப்பு பேட்ஜ் அணிந்து தொழுகை நடத்திய இந்திய தேசிய லீக்.! - Seithipunal
Seithipunal


ஹிஜாப் தடை செல்லும் என கர்நாடக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, இந்திய தேசிய லீக் கட்சியினர் கறுப்பு பேட்ஜ் அணிந்து தொழுகை நடத்தி உள்ளனர். 

இதுகுறித்து இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் ஸ்டார் பாட்ஷா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, "கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. உயர் நீதிமன்றம், ‘ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல.

எனவே கல்வி நிலையங்களில் ஹிஜாப்புக்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்' என கடந்த செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்புக்கு ஒரு தலைபட்சமான தீர்ப்பாகும். இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை முழுமையாக அறிந்து கொள்ளாமல் கர்நாடக நீதிபதிகள் இந்த தீர்ப்பை அளித்துள்ளனர். 
 
இந்தியா என்பது பன்முகதன்மை கொண்ட நாடு, இந்தியா திருநாட்டில் இனம், மொழி, மதம் என பிரிந்து இருந்தாலும், மனதளவில் அனைவரும் சகோதர பாசத்துடன் தான் பழகி வருகின்றனர். இந்த உறவில் விரிசலை ஏற்படுத்த சில மதவாத சக்திகள் சதிதிட்டம் தீட்டி வருகின்றனர். 

அந்த வகையில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களை கொண்டு வர முயற்சித்தவர்கள் அதில் தோல்வி அடைந்து, தற்போது ஹிஜாப் விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். பங்குசந்தையில் சித்ரா என்ற அதிகாரி செய்த பல லட்சம் கோடி ஊழல் செய்தியை மறைக்க, ஹிஜாப் விவகாரத்தை கையில் எடுத்து அரசியல் செய்து வருகின்றனர்" என்று ஸ்டார் பாட்ஷா தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர் சையத் ஷாதான் அஹமது, வட சென்னை (கிழக்கு) மாவட்ட தலைவர் ஜலீல், வட சென்னை (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஷாஜகான், மாநில இளைஞரணி செயலாளர் வசீம் அக்ரம், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் தப்ரேஷ் அக்ரம், மத்திய சென்னை மாவட்ட துணை தலைவர் அஜீஸ் அஹமது, சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பஷீர், 63 வட்ட செயலாளர் முஸ்தபா உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hijab issue judgement INL Tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->