ஹிஜாப் விருப்பமா.. தாராளமாக டிசி பெற்றுக்கொள்ளுங்கள்., இஸ்லாமிய மாணவிகளும், கல்லூரி நிர்வாகங்களும்  அடுத்த கட்டத்தை நோக்கி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தின்,  தக்ஷிண கன்னட மாவட்டத்தில் மட்டும், ஹிஜாப் அணிந்து வந்த 24 மாணவிகளை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து மாநில அரசும், கர்நாடக உயர் நீதிமன்றமும் பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் மத அடையாளங்களுடன் கூடிய உடைகளை அணியக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் மீண்டும் ஹிஜாப் விவகாரம் தலைதூக்க தொடங்கியுள்ளது. தக்ஷிண கன்னட மாவட்டத்தில் மட்டும், ஹிஜாப் அணிந்து வந்த 24 மாணவிகளை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகங்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உணவங்காடி கல்லூரியை சேர்ந்த 24 மாணவிகள், கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். இதனையடுத்து ஹிஜாப் அணிந்து வந்த அந்த 24 மாணவிகளையும் ஒரு வாரம் சஸ்பெண்ட் (இடைநீக்கம்) செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்காரணமாக, இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த மாணவிகள் பலர் ஹிஜாப் அனுமதிக்கப்பட்ட பிற கல்லூரிகளில் சேர, அனுமதி மறுக்கும் கல்வி நிறுவனங்களில் இருந்து மாற்று சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

அதே சமயத்தில் ஹிஜாப் அணிந்து வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்புவோர், மாற்றுச் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்று கல்லூரி நிர்வாகங்களும் அறிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hijab issue karnataka 24 student suspend


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->