ஹிஜாப் அணிய அனுமதி கோரிய வழக்கில் திடீர் திருப்பம் : கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு.!
hijab issue karnataka hc
கடந்த மாதத் தொடக்கத்தில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசு புதுமுகக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த 12 இஸ்லாமிய மாணவிகளை வளாகத்தில் நுழைய அனுமதித்த கல்லூரி நிர்வாகம், வகுப்புகளுக்கு அனுமதிக்க மறுத்ததால் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.
இதில், சில மாணவிகள் மட்டும் ஹிஜாப் அணிய அனுமதி கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இரு தினங்களாக நடந்துவந்த நிலையில், இன்று இந்த வழங்கி உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு செல்வது தொடர்பான வழக்காகி கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை வந்தபோது, கர்நாடக மாநிலத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பதட்டமான சூழ்நிலை நிலவாத வந்த வண்ணம் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களும் விசாரணை முடியும் வரை அமைதி காக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கிடையே, பெங்களூர் நகரில் உள்ள கல்வி நிறுவனங்களில் இருந்து 200 மீட்டர் வரை போராட்டம், கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் அருகே போராட்டம் நடத்த இரண்டு வாரத்திற்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.