நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை எந்த மத அடையாளங்களுடனும் மாணவர்கள் வருவதற்கு தடை.!
hijab issue karnataka hc hearing
கடந்த மாதத் தொடக்கத்தில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசு புதுமுகக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த 12 இஸ்லாமிய மாணவிகளை வளாகத்தில் நுழைய அனுமதித்த கல்லூரி நிர்வாகம், வகுப்புகளுக்கு அனுமதிக்க மறுத்ததால் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.
இதில், சில மாணவிகள் மட்டும் ஹிஜாப் அணிய அனுமதி கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இரு மூன்று நடந்துவந்த நிலையில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு செல்வது தொடர்பான வழக்காகி கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, "நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் கல்லூரிகளுக்கு அணிந்து செல்வதற்கு தடை" விதித்து கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
hijab issue karnataka hc hearing