இஸ்லாமிய உணவகங்களை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும்..பாஜக சி.டி.ரவி சர்ச்சை கருத்து.!
Hindus avoid muslim hotels
கர்நாடகாவில் இஸ்லாமிய உணவகங்களில் இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் சி.டி.ரவி கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் ஜாப்ஸ் ஆட்சியை தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான பல்வேறு தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபகாலமாக இஸ்லாமிய உணவகங்களில் தயார் செய்யப்படும் ஹலால் உணவுகளை இந்துக்கள் ஒரு கடிக்க வேண்டும் என்ற கருத்து இணையத்தில் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி ஹலால் என்பது 'பொருளாதார ஜிஹாத். இஸ்லாமியர்கள் மற்றவர்களுடன் வியாபாரம் செய்வதை தடுக்க இந்த ஜிஹாத் பயன்படுத்தப்படுகிறது. முஸ்லிம்கள் இந்துக்களிடம் இருந்து இறைச்சி மற்றும் பொருட்களை வாங்க மறுக்கும் போது, இந்துக்கள் மட்டும் ஏன் அவர்களிடம் இருந்து வாங்க வேண்டும். முஸ்லிம்கள் ஹலால் இல்லாத இறைச்சியை பயன்படுத்தினால் இந்துக்களும் ஹலால் இறைச்சியை பயன்படுத்துவார்கள்' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Hindus avoid muslim hotels