ஆதாருடன் இணைப்பது எப்படி? '6பி' படிவம் - முழு விவரத்தையும் தெரிவித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி.!
How to link vote ID with Aadhaar
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள் மற்றும் குறைகளை சரிசெய்யும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கி உள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் வாக்காளர் பதிவு அலுவலர்கள், '6பி' படிவத்தை அளித்து, அதில் விவரங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தனித்தனி செல்போன் எண்ணை கட்டாயம் தரவேண்டும் என்று அறிவுறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், ஆதார் இணைப்புக்கான '6பி' படிவத்துக்கு ஒப்புகைச் சீட்டு தரப்படுவது இல்லை என்றும், ஒப்புகைச்சீட்டு தராவிட்டால் ஆதார் இணைப்பு குறித்த நிலையை எப்படி அறியமுடியும் என்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆதார் இணைப்புக்கு ஒப்புகைச் சீட்டு தரவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளதாவது,
"நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆதார் இணைப்பு பணிகள் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் இதுவரை 97 லட்சம் பேர் ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க பதிவு செய்துள்ளனர்.
வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் பொதுமக்கள் 6பி படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களின் நகலையும் அளிக்க வேண்டியது இல்லை. தேசிய வாக்காளர் சேவை அமைப்பு மூலமாகவும் வாக்காளர்கள் இந்த இணைப்பை மேற்கொள்ளலாம்.
'6பி' படிவத்தில் உள்ள விவரங்களின்படி செல்போன் எண்ணை அளிக்க வேண்டும். இருப்பினும், பெரும்பாலான வீடுகளில் ஒரே ஒரு செல்போன் மட்டுமே இருக்கும். இந்த நிலையில், ஒரு செல்போன் எண்ணை மட்டுமே கொடுத்தால் போதும்". என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
How to link vote ID with Aadhaar