நான் கிறிஸ்தவர் என்பதில் பெருமை கொள்கிறேன் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


சென்னை கிழக்கு மாவட்டம் திமுக சார்பாக துறைமுகம் பகுதியில் உள்ள டான் போஸ்கோ தொடக்கப்பள்ளி மைதானத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கி சிறப்புரையாற்றினர்.

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எல்லாரும் திராவிடம் மாடல் ஆட்சி என்றால் என்ன கேட்கிறார்கள். அதற்கு பதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இங்கே அல்லேலூயா என கூறி கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்வதுதான் திராவிட மாடல் ஆட்சி என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நானும் கிறிஸ்துவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். நான் படித்தது ஒரு கிறிஸ்துவ பள்ளியில் தான். கல்லூரியில் பட்டம் பெற்றதும் கிறிஸ்துவ கல்லூரியில் தான். மேலும் நான் காதலித்து திருமணம் செய்து கொண்டது ஒரு கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமையாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I am proud to be a Christian Minister Udayanidhi Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->