நான் ஆதரவு தெரிவிக்க மாட்டேன் - என்.டி.ஏ கூட்டணியில் நிலவும் சர்ச்சை!....என்ன நடக்கிறது?
I will not support Controversy in NDA alliance What is going on
ஆரம்பத்தில் வக்பு வாரிய சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிதிஷ் குமார் கட்சி, தற்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பா.ஜ.க. கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி அரசு மத்தியில் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்ததாக, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஜே.டி.யு கட்சி மிக முக்கிய கட்சியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது வக்பு வாரியத்தில் பல சட்டத் திருத்தங்களை முன்மொழிந்தது. இதற்கிடையே தற்போது மத்திய அரசு முன்மொழிந்துள்ள வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு நிதிஷ்குமார் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், என்.டி.ஏ. கூட்டணியில் சலசலப்பை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி இந்த விவகாரத்தில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்த நிலையில், தற்போது நிதிஷ்குமார் கட்சியும் அதில் இணைந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த வக்பு வாரிய சட்டத்திற்கு ஜே.டி.யு. ஆதரவு தெரிவித்தநிலையில், இச்சட்டத் திருத்தம் குறித்து இஸ்லாமியர்கள் அச்சம் தெரிவிப்பதாக கூறி தற்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
I will not support Controversy in NDA alliance What is going on