முதலமைச்சர் வீட்டுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த சம்பவம்.! நீங்களே இப்படி பண்ணலாமா?
imposed on Punjab Chief Ministers residence
பஞ்சாப் மாநில முதலமைச்சர் சண்டிகர் இல்லத்தில் இருந்து குப்பைகள் வீட்டுக்கு வெளியே ஒட்டப்பட்டு வந்ததால் முதலமைச்சர் சண்டிகர் இல்லத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
இதற்காக மாநகராட்சி சார்பில் மத்திய ரிசர்வ் காவல் படையின் பட்டாலியன் துணைக் கண்காணிப்பாளர் ஹர்ஜிந்தர் சிங் பெயரில் சலான் அனுப்பப்பட்டது. அந்த சலானில், அவரது முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக உள்ளூர் பாஜக கவுன்சிலர் மகேஷிந்தர் சிங் சித்து தெரிவித்துள்ளதாவது,
"பஞ்சாப் மாநில முதலமைச்சர் சண்டிகரின் இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்கள் குப்பைகளை வீட்டுக்கு வெளியே கொட்டுவதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் புகார் தெரிவித்தனர். குப்பை வீட்டுக்கு வெளியே கொட்டுவதை நிறுத்தும்படி மாநகராட்சி பலமுறை அறிவித்துள்ளது.
ஆனால் மீண்டும் அவரது இல்லத்தில் இருந்து வெளியே குப்பை கொட்டப்பட்டு வந்துள்ளதால், மாநகராட்சி ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது". என்று உள்ளூர் பாஜக கவுன்சிலர் மகேஷிந்தர் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
English Summary
imposed on Punjab Chief Ministers residence