மருமகன்களால் சிக்கிய ஜெகத்ரட்சகன்! டெல்லியிடம் முக்கிய ஆவணம்! பறந்து வந்த முக்கிய புள்ளி!
Income Tax director sunil Gupta enquiried Jagatrakshagan
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் தனது கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் பெற்ற வருமானத்திற்கு முறையாக கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது
அதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் தொடந்து 5வது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சில இடங்களில் மட்டுமே சோதனை நிறைவுற்ற நிலையில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வருமானவரித்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை தொழில்நுட்ப தடயவியல் நிபுணர்களின் உதவியோடு வருமானவரித்துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக டெல்லியில் இருந்து வந்த வருமான வரித்துறை ஆணையர் சுனில் குப்தா ஜெகத்ரட்சகன் வீட்டில் விசாரணை நடத்தி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.. ஜெகத்ரட்சகனின் மருமகன்கள் இளமாறன் மற்றும் நாராயணசாமி ஆகியோர் தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களை கொண்டு அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் வீட்டில் இந்த விசாரணை நடைபெற்ற வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஐந்து நாட்களாக திமுகவின் முக்கிய பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Income Tax director sunil Gupta enquiried Jagatrakshagan