மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு..! - Seithipunal
Seithipunal



மத்தியில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி 3ஆவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின், இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் வரி அமைப்புகளில் சில மாறுதல்கள் கொண்டு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருமான வரி செலுத்துபவர்களுக்கு வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

அந்த வகையில் ரூ. 15 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுவோரின் தனி நபர் வரி சலுகை சீரமைக்கப் படலாம். மேலும் வரி விலக்கு வரம்பு தற்போது ரூ. 3 லட்சமாக உள்ளது. இது இந்த பட்ஜெட்டில் ரூ. 5 லட்சமாக உயர்த்தப் படலாம் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் தற்போதுள்ள வரி அமைப்பின் படி ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவிகிதம் வரி விதிக்கப் படுகிறது. இனி இந்த வரம்பு ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவோருக்கானதாக மாற்றப் படலாம் என்று தெரிய வந்துள்ளது. 

இந்த வரி அமைப்பு மாற்றமானது பொருளாதார வளர்ச்சியையும், நுகர்வோர் செலவுக்கான அளவீட்டை அதிகரிப்பதையுமே நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து மத்திய நிதி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Income Tax Excemption Will Be Rise In Union Budget


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->