ரூபாய் நோட்டு மாலை .. பத்தாயிரம் சில்லறைக் காசு.. வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி உள்ளது. மேலும் ஜூன்  ம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இன்று காலை 11 மணிக்கு இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் விக்கிரவாண்டி தொகுதியில் தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பின் தலைவர் அக்னி ஆழ்வார் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்நிலையில் அக்னி ஆழ்வார் இன்று காலை 11.10 மணிக்கே வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்தார்.

இதற்காக அவர் வந்த விதம் தான் அனைவர் கருத்தையும் கவர்ந்து திரும்பி பார்க்க  வைத்துள்ளது. மேலும் அக்னி ஆழ்வார் அவரது கழுத்தில் ரூபாய் நோட்டில் மாலை அணிந்து கொண்டு வந்து வேட்மனு தாக்கல் செய்தார். 

இதையடுத்து அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான டெபாசிட் தொகையான ரூ. 10 ஆயிரத்தை ஒரு மூட்டையில் சில்லறை காசுகளாக கட்டிக் கொண்டு வந்து தேர்தல் அலுவலரிடம் கொடுத்தார். இவரைத் தொடர்ந்து தேர்தல் மன்னம் எனப்படும் பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரும் சுயேட்சையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து நூர் முகம்மது, ராஜேந்திரன் போன்ற சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Independent Candidates Filing Their Nomination in Vikravandi By Election


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->