மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் 'இந்தியா' கூட்டணி.. இவர் தான் வேட்பாளர்..!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் முதல் மக்களவைக் கூட்டத் தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது.

இதையடுத்து இடைக்கால சபாநாயகருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து பிரதமர் மோடி உள்ளிட்ட மக்களவை உறுப்பினர்களுக்கு இடைக்கால சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

இந்த நிகழ்வுகள் கடந்த இரண்டு நாட்களாக மக்களவையில் நடைபெற்றன. இதையடுத்து இன்று மக்களவையின் சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய ஜனநாயக வரலாற்றிலேயே சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறுவது இது மூன்றாவது முறை. சபாநாயகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் படுவது தான் காலம் காலமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் சபாநாயகர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் கே. சுரேஷ் ஆகியோர் போட்டியிட உள்ளனர். இதுகுறித்து மவெலிக்கரா எம். பி. சுரேஷ் தெரிவிக்கையில், "முதலில் இந்தியா கூட்டணி சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. துணை சபாநாயகர் பதவி குறித்து தான் கேட்டோம். 

ஆனால் NDA கூட்டணி அரசு எதிர்க் கட்சிகளுடன் ஒத்துழைக்க தயாராக இல்லை என்று தெரிகிறது. துணை சபாநாயகர் பதவியை எதிர்க் கட்சிகளுக்கு கொடுக்க NDA கூட்டணிக்கு மனம் வரவில்லை. எனவே தான் இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDIA Alliance Will Be in Contest For Lok Sabha Speaker Post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->