"இந்தியா" கூட்டணியே வெல்லும் - ராகுல் காந்தி நம்பிக்கை..!! - Seithipunal
Seithipunal


இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கான 6 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில், ஜூன் 1ம் தேதி 7ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பீகார், இமாச்சல பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, உத்திரபிரதேசம், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் 7ம் கட்ட தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் நேற்று மே 30ம் தேதி மாலையுடன் நிறைவுக்கு வந்தது. இதையடுத்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் "பாராளுமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் இறுதி நாள் இன்று.

இவ்வேளையில் மகத்தான நாட்டு மக்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் ஒன்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். "இந்தியா" கூட்டணி தான் வெல்லப் போகிறது. நாட்டின் அரசியலைப்பு சாசனத்தை காப்பாற்றுவதற்காக உறுதியாக நின்ற அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டு மக்கள் மீது அக்கறையுள்ள பல பிரச்சனைகளில் நாம் போராடி வெற்றி பெற்றுள்ளோம். பல விதங்களில் மக்களை அவர்கள் திசை திருப்ப முயன்றாலும், நாம் சளைக்காமல் முன்னேறினோம். கடைசி நிமிடம் வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளைக் கண்காணிக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று ராகுல் காந்தி பதிவிட்டு உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDIA Alliiance Will Win Rahul Gandhi Hope


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->