மறைமுக அட்டாக்!!! ஓநாயும் ,வெள்ளாடும் ஒன்றுபட்டிருக்க முடியுமா? - OPS குறித்து EPS
Indirect Attack Can the wolf and the wolf unite EPS on OPS
கடந்த வாரத்தில்,'எந்த நிபந்தனையுமின்றி அதிமுகவில் இணைய தயார்' என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே மோதல் இருந்த நிலையில் திடீரென ஓ.பி.எஸ் கொடுத்த அறிவிப்பு பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளையொட்டி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதயுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி :
அந்தக் கடிதத்தில் அவர் எழுதியிருந்தாவது, " பணத்திற்காகவும் பதவிக்காகவும் சிலர் கட்சியை காட்டிக் கொடுக்கத் தயாராக இருந்தனர். ஆனால் திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகள் காகித ஓடம் போல் அடுத்து செல்லப்பட்டன. ஓநாயும் வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும் பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெல்லாமை ஆகுமா? விசுவாசியும் துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது. அதிமுக தலைமையிலான சிறப்புமிக்க வெற்றிக் கூட்டணி அமையப்போகிறது. ஜெயலலிதாவின் சூளுரையைச் செயல்படுத்தி அதிமுக ஆட்சியை மலரச் செய்வோம்" என்று அதில் சூளுரைத்துள்ளார்.
English Summary
Indirect Attack Can the wolf and the wolf unite EPS on OPS