கணக்கில் வராத 11.2 கோடி!! சல்லடை போட்டு சலிக்கும் ஐடி! பதறும் திமுக வட்டாரம்!
Info IT seized 11 Crores in DMK MP jagadratsakan related places
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 70க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை அடையாறு, கஸ்தூரிபாய் நகர், 3வது தெருவில் உள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 12 வருமானவரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜெகத்ரட்சகன் வீட்டில் ரகசிய அறை ஏதேனும் இருக்கிறதா? என்ற கோணத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையானது இன்று நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக சவிதா கல்விக்குழுமம் தொடர்புடைய இடங்களிலிருந்து கணக்கில் வராத ரூ.10 கோடி சிக்கியதாகவும், ஜெகத்ரட்சகனின் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.1.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை தரப்பு உறுதிப்படுத்தியுள்ளன. இதனால் திமுக வட்டாரத்தில் பதற்றமான சூழல் இருந்து வருகிறது.
English Summary
Info IT seized 11 Crores in DMK MP jagadratsakan related places