ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் திரிச்சூரை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் சையது நபில் அகமது சென்னையில் என்.ஐ.ஏ கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது

நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த சையது நபி அகமது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மாறிமாறி தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்கள் மூலம் நேபாள நாட்டிற்கு தப்பி செல்ல முயன்ற போது என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சையது நபில் அகமதுவிடமிருந்து பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஈரோடு வனப்பகுதியில் தலைமறைவாக இருந்த ஆசிப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISIS terrorist leader was arrested by Nia in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->