அதிகாலையிலேயே! 40 இடங்களில் IT ரெய்டு! அதிர்ச்சியில் திமுக உடன்பிறப்புகள்!
IT raid in 40 places related to DMK MP Jagadratsakan
திமுக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று அதிகாலை 6:00 மணி முதல் இந்த சோதனையானது தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேளச்சேரியில் அமைந்துள்ள பாலாஜி பல் மருத்துவமனை, தியாகராய நகர் திலக் தெருவில் உள்ள அவருக்கு சொந்தமான அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்ற வருகிறது.
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் பல்வேறு தொழில்கள் செய்து வரும் நிலையில் அவர் வருமானத்தை மறைத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை கொண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்று முடிந்த பிறகு முழுமையான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திமுக அமைச்சர்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனை செய்து வரும் நிலையில் தற்போது திமுகவின் முக்கிய புள்ளியான ஜெகத்ரட்சகன் தொடர்பான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருவது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
English Summary
IT raid in 40 places related to DMK MP Jagadratsakan