தபால் வாக்குப்பதிவில் குளறுபடி.. ஜாக்டோ ஜியோ பரபரப்பு கடிதம்.!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தபால் வாக்குகள் மூலம் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். 

இந்த நிலையில் தபால் வாக்குகளில் குளறுபடி ஏற்படுவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில் தேர்தல் வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபட்டுள்ள தேர்தல் அலுவலர்களான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகளை வழங்குவதில் கடும் சுணக்கமும் குளறுபடியும் இருப்பதால் அனைத்து தேர்தல் அலுவலர்களுக்கும் நூறு சதவீத தபால் வாக்குகளை உறுதி செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரகாஷ் சாகுவிற்கு கடிதம் எழுதியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jacto geo sent request letter to ECI regards postal vote


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->