அதிமுக கூட்டணிக்கு தான் ஆதரவு.. உறுதிப்படுத்திய முக்கிய புள்ளி.!! குஷியில் ஈபிஎஸ்.!!
Jagan moorthy again confirm he support AIADMK alliance
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய போது முதல் ஆளாக அதிமுகவுக்கு ஆதரவாக நின்றவர் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி.
எதிர்வரும் மக்களவைப் போது தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு திருவள்ளூர் காஞ்சிபுரம் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் எனவும், திருவள்ளூர் தொகுதி ஒதுக்கினால் நன்றாக இருக்கும் எனவும் அதிமுகவுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால் தொகுதி பங்கிட்டின் போது புரட்சி பாரதம் கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதியை கூட ஒதுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஜெகன் மூர்த்தி கடந்த சில நாட்களாக மௌனம் காத்து வந்தார். தான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கே வி குப்பம் தொகுதியில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளாமல் ஜெகன் மூர்த்தி தவிர்த்து வந்தார்.
இதனால் ஜெகன் மூர்த்தி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவார் என செய்திகள் வெளியாகின. இதற்கிடையே தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பூவை ஜெகன் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் "அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் புரட்சி பாரதம் தொடரும். மக்களவைப் பொதுத் தேர்தலில் சீட்டு வழங்காததால் வருத்தத்தில் இருந்தோம். சட்டமன்ற பொது தேர்தலில் முக்கியத்துவம் அளிப்பதாக அதிமுக உறுதி அளித்துள்ளது.
அதே வேளையில் பெரும்பாலான தொண்டர்களும் அதிமுகவுடன் செல்லவே விரும்புகின்றனர். இதனால் எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என ஒருமனதாக புரட்சி பாரதம் முடிவு செய்துள்ளது" என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அதிமுக தரப்பு நிம்மதி அடைந்துள்ளது.
English Summary
Jagan moorthy again confirm he support AIADMK alliance