"திமுக ஆட்சியில் தொடரும் தீண்டாமை" - வரிந்து கட்டும் ஜெகன் மூர்த்தி.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் பட்டியலின இளைஞர் ஒருவர் திமுக நிர்வாகிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் "விழுப்புரம் பட்டியலின இளைஞர்கள் மீது காரை ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டியலின மக்களுக்கு எதிரான அநீதி தொடர்ந்து இழைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மரக்காணம் ஒன்றியம் நடுகுப்பம் கிராமத்தில் இருசக்கர வானத்தில் சென்றுக்கொண்டிருந்த பட்டியலின இளைஞர்களை, ஆதிக்க சமூகத்தை சேர்ந்த 3 பேர் காரால் ஏற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். 

இதில் சிக்கிய பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவரின் கால் எலும்பு முறிந்துள்ளது. அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலில் ஈடுபட்டவர் திமுகவை சேர்ந்த பிரமுகர் என்பதும் தெரியவந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பட்டியலின மக்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். பாதுகாப்பு வழங்கும் காவல்துறை எளிய மக்களின் மீது நடத்திய தாக்குதலுக்கு புரட்சி பாரதம் கட்சி கண்டனத்தை தெரிவிக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jagan Moorthy alleged Untouchability will continue under DMK rule


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->