ஜெகன் மூர்த்தியின் அதிருப்தியால் அதிமுகவுக்கு பின்னடைவு.!! - Seithipunal
Seithipunal


கடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த போது தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த ஜி.கே வாசன், ஜான் பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி, ஏ‌.சி சண்முகம் ஆகியோர் மௌனம் காத்த போது முதல் ஆளாக அதிமுகவுக்கு ஆதரவாக பேசியவர் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி. 

இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் கே வி குப்பம் தொகுதியில் அதிமுக சின்னமான இரட்டை இலை போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறிய போது அதிமுக எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் புரட்சி பாரதம் உறுதுணையாக இருக்கும் என அறிவித்து அதிமுக பக்கம் நின்றவர். 

எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தலில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஜெகன் மூர்த்தி அதிமுகவிடம் வலியுறுத்தி இருந்தார்.

ஆனால் திருவள்ளூர் தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கிய அதிமுக காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திருவள்ளூர் தொகுதி தனக்கு ஒதுக்கப்படும் என பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த ஜெகன் மூர்த்திக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. 

திருவள்ளூர் தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்து இறங்கி வந்த போதும் அதனை எடப்பாடி பழனிச்சாமி கண்டு கொள்ளவில்லை என புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் புலம்புகின்றனர். அதிமுக கூட்டணியிலிருந்து புரட்சி பாரதம் வெளியேற வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அவ்வாறு வெளியேறினால் திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருப்பதால் அங்கு இணைய முடியாது சூழலால் தற்போது நடைபெற உள்ள மக்களவைப் பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு சாதகமாக பிரச்சாரம் செய்யாமல் ஜெகன் மூர்த்தி ஒதுங்கி உள்ளார். ஜெகன் மூர்த்தியின் இந்த முடிவால் வடமாவட்டங்களில் உள்ள ஒரு சில தொகுதிகளில் அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JaganMoorthy is unhappy with AIADMK


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->