₹400 கோடி + ₹300 கோடி + ₹60 கோடி!! ஜெகத்ரட்சகனிடம் மொத்தமாக அள்ளிய ஐடி அதிகாரிகள்!!
Jagatrakshagan related places itraid report released
திமுக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்பட்ட நிலையில் ₹400 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கணக்கில் வராத ₹300 கோடி ரொக்கம் தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றப்பட்டதும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ₹32 கோடி ரொக்கம், ₹22 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட ₹60 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி உள்ளிட்ட ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் அது தொடர்புடைய 100 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மேற்கண்ட கணக்கில் வராத ரொக்கம், தங்கம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
English Summary
Jagatrakshagan related places itraid report released