ஜம்மு-காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல் - வாக்குப் பதிவு முடிவில் அதிர்ச்சி தகவல்? - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீரில் நேற்று நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் 57.03 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு முதல் கட்ட சட்டசபை தேர்தல் கடந்த 18-ம் தேதி  நடைபெற்றது.

அந்தவகையில் காஷ்மீரில் 16 தொகுதிகள் மற்றும்  ஜம்முவில் 8 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில் அங்கு 2ம் கட்ட சட்ட சபை தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
ஜம்முவில் 11 தொகுதிகள், காஷ்மீரில் 15 தொகுதிகள் என மொத்தம் 26 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர்,  ஜம்மு காஷ்மீரில் வரலாறு உருவாகி வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிப்பது பாராட்டுக்குரியது என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், 2-ம் கட்ட தேர்தலில் 57.03 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கிட்டத்திட்ட 60 சதவீதத்தை நெருங்கும் வகையில் இந்த முடிவுகள் இருப்பது கடந்த தேர்தலைகளை விட இது முன்னேற்றம் என்று சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu and Kashmir 2nd phase election Shocking information at the end of vote registration


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->