ஜம்மு - காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல் - தொடங்கியது வாக்குப்பதிவு!
Jammu and Kashmir Phase 2 Elections Voting Begins
ஜம்மு - காஷ்மீரில், சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு முதல் கட்ட சட்டசபை தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது.
அந்தவகையில் காஷ்மீரில் 16 தொகுதிகள் மற்றும் ஜம்முவில் 8 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் அங்கு 2ம் கட்ட சட்ட சபை தேர்தல் தொடங்கியாது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
ஜம்முவில் 11 தொகுதிகள், காஷ்மீரில் 15 தொகுதிகள் என மொத்தம் 26 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் மொத்தம் 239 வேட்பாளர்கள் களம் காணும் சூழ்நிலையில், 3 ஆயிரத்து 502 வாக்குச்சாவடி மையங்கள் வாக்களிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து வரும் அக்டோபர் 1ம் தேதி மூன்றாம் கட்ட சட்டசபை தேர்தல் நடக்கிறது.
English Summary
Jammu and Kashmir Phase 2 Elections Voting Begins