பருக் அப்துல்லாவுக்கு இந்தியாவில் வாழ்வது மூச்சு முட்டினால், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் - ஆர்எஸ்எஸ் இந்திரேஷ் குமார்.!
Jammu Kashmir Farooq Abdullah VS RSS
பருக் அப்துல்லாவுக்கு இந்தியாவில் வாழ்வது மூச்சு முட்டினால், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று, ஆர்எஸ்எஸ்.,யை சேர்ந்த இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் நிறுவனர் சேக் முகமது அப்துல்லா.,வின் 116வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள அவரது நினைவிடத்தில் கட்சியின் இளைஞரணி மாநாடு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் பருக் அப்துல்லா, "வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு வருடம் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, தியாகம் செய்ததை போல, ஜம்மு-காஷ்மீரில் மாநில அந்தஸ்தையும், சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்க ஜம்மு காஷ்மீர் மக்கள் தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும்" என்று தெரிவித்தார்.
அதே சமயத்தில் தனது கட்சி வன்முறையை ஆதரிக்காது என்றும் அவர் பேசினார். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மக்கள் தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும் என்று பருக் அப்துல்லாவின் இந்த பேச்சுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அதில், "பருக் அப்துல்லாவின் இந்த பேச்சு வன்முறையை விரும்புவது போல் உள்ளதாகவும், அமைதியை அவர் விரும்பவில்லை என்றும் தெரிகிறது. பரூக் அப்துல்லாவுக்கு இந்தியாவில் வாழ மூச்சு முட்டுவது போல் நினைத்தால், நாட்டை விட்டு வெளியேறி, உலகில் அவர் விரும்பும் எந்த நாட்டிற்கு வேண்டுமென வேண்டுமானாலும் சென்று வாழலாம்" என்று இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜம்மு காஷ்மீர் மக்கள் மீது அடக்குமுறை நடப்பதாக கூறி தேசிய தலைநகரில் போராட்டம் நடத்திய பிடிபி தலைவர் மெகபூபா முப்திக்கு பொய் சொல்வது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது என்று இந்திரேஷ் குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Jammu Kashmir Farooq Abdullah VS RSS