விடியா அரசு மாணவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறது? - அதிமுக ஜெயக்குமார் கேள்வி..!!
Jayakumar asked what answer the TNgovt is going to give to students
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, தர்மபுரி மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி இளநிலை மருத்துவ படிப்புக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவர் ஆணையத்தின் இளநிலை மருத்துவர் கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது.
தமிழக அரசின் மெத்தனப்போக்கால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்சி வருகின்றன. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "திறனற்ற திமுக அரசால் மூன்று மருத்துவக்கல்லூரிகள் மூடுவிழா காண இருக்கிறது! ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகள் கொண்டு வந்தது அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசு. அங்கீகாரம் ரத்தாகும் அளவிற்கு அலட்சியமாக இருந்த விடியா அரசு மாணவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறது?!" என கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.
English Summary
Jayakumar asked what answer the TNgovt is going to give to students