மேயர் பிரியாவுக்காக வருத்தப்படும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!! - Seithipunal
Seithipunal


மாண்டஸ் புயலால் மகாபலிபுரம், கோக்கிலமேடு, மெய்யூர் குப்பம், புதுப்பட்டினம் போன்ற பகுதிகள் கடும் பாதிப்புக்கு ஆளானது. இந்த பகுதியில் உள்ள மீனவர்களின் படகுகள் கடுமையாக சேதம் அடைந்தன. இந்த நிலையில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "கடந்த அதிமுக ஆட்சியில் புதுப்பட்டினம் மீனவ பகுதியில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் பாதுகாக்கப்பட்டது. அம்மாவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டத்திற்கு மீனவர்கள் நன்றி தெரிவித்திருந்தனர்.

மீனவர் பதிவு பகுதிகளை முதல்வர் ஸ்டாலினுடன் பார்வையிட வந்த சென்னை மேயர் பிரியா காரில் தொங்கியபடி சென்றது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

முதலமைச்சர் கலந்து கொள்ளும் திறப்பு விழாக்களில் ரிப்பன் வெட்ட மேயர் பிரியா கத்திரிக்கோல் தட்டை ஏந்தி நிற்கிறார். முதல்வர் ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கிக் கொண்டு செல்லும் தொங்கல் மேயராக உள்ளார்.

மேயர் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் இந்த விடியா திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட அம்மா ஆண்ட இந்த மண்ணில் இப்படி ஒரு இழுக்கு ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது" என செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வருத்தப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar feel sad that Mayor Priya went hanging in the car


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->