திமுக என்பது கட்சி அல்ல அரச குடும்பம்.. கே.என் நேரு உறுதி செய்தார்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்..!! - Seithipunal
Seithipunal


திருச்சியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு 22 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பல்வேறு விஷயங்களை அமைச்சர் கே.என் நேரு பேசியிருந்தாலும் அவர் உதயநிதி ஸ்டாலினை பற்றி பேசிய விவகாரம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

உதயநிதி ஸ்டாலினை பற்றி விழா மேடையில் பேசிய அவர் "இன்றைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுக்களை திருச்சியில் தொடங்கி வைத்தது எங்களுக்கு எண்ணற்ற மகிழ்ச்சி. திருச்சியில் ஆரம்பித்த எதுவும் வீண் போனதில்லை. நீங்கள் சிறப்பான இடத்திற்கு வருவீர்கள் என்று வாழ்த்துகிறேன். பேரரசர் போல் தளபதியும் சிற்றரசர் போல் உதயநிதியும் இங்கு வந்திருக்கிறார்கள்" என புகழ்ந்து தள்ளி இருந்தார்.

அமைச்சர் கே.என் நேரு பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் "திருச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்ட விழாவில் கே என் நேரு பேச்சு.. பேரரசர் போல் தளபதி.., சிற்றரசன் போல் உதயநிதி.., ஆக திமுக ஜனநாயக கட்சி இல்லை அரச குடும்பம் என்பதை மேடையில் உறுதி செய்தார் கே.என் நேரு.." என திமுகவை விமர்சனம் செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar said Nehru confirmed DMK is not a party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->