ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் : முதமைச்சரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது பாஜக! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில், பாஜக தனது 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கான சட்டசபைக்கு அடுத்த மாதம் நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதி என இரண்டு  கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சியினரிடையே தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.

இதற்கிடையே, பாஜக 66 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 19-ம் தேதி  வெளியிட்டது. அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநில பாஜக  தலைவர் பாபுலால் மராண்டி தன்வார் தொகுதியிலும், லோபின் ஹெம்ப்ரோம், போரியோ தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இதே போல் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் சரைக்கேலாவிலும், முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மூத்த மருமகள் சீதா சோரன் ஜம்தரா தொகுதியிலும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாஜக தனது 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக, பர்ஹைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக கம்லியேல் ஹெம்ப்ரோம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jharkhand assembly election bjp announces candidate to contest against chief minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->