ஒரே சாதி: அரசுப் பள்ளியில் ஆசிரியை கொலை வழக்கில் திடீர் திருப்பம்! நேற்று மாலை நடந்த சம்பவம் - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்! - Seithipunal
Seithipunal



தஞ்சை மல்லிபட்டினம் அரசு பள்ளி ஆசிரியை ரமணியை மதன்குமார் என்ற இளைஞர் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ஆசிரியை ரமணி - மதன்குமார் காதிலிது வந்த நிலையில், நேற்று மாலை மதன் குமார் பெண்கேட்டு ரமணி வீட்டுக்கு சென்றுள்ளார். 

இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கௌரவ பிரச்சனை அல்லது மதன் குமாரின் ஒழுக்கம் (நடத்தை) காரணமாக பெண் தர மறுத்ததாக சொல்லப்படுகிறது.

பெற்றோருக்காக திருமணம் செய்து கொள்ள ரமணியும் மறுத்த நிலையில், இன்று காலை பள்ளி ஆசிரியர் அறையில் வைத்து ரமணியை கத்தியால் குத்தி கொலை செய்த மதன்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே பள்ளியில் சமையலர் இந்தக்கொலை நடந்தது எப்படி என்று சொன்ன தகவலின்படி, "ஆசிரியை ரமணி கடந்த 6 மாதமாக பணிபுரிந்து வருகிறார். ஆசிரியர்கள் ஓய்வறையில் ரமணி மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். மற்ற ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார்கள்.

ஆசிரியர் ஓய்வறைக்குள் புகுந்த மதன் குமார், சில நிமிடங்கள் பேசி வாக்குவாதம் செய்தார். திடீரென ஆசிரியை ரமணியை மதன் குமார் சரமாரியாக கத்தியால் குத்தினார். 

மதன்குமார், பள்ளியில் படிக்கும் மாணவர் யாரோ ஒருவருக்கு உணவு எடுத்து வருகிறார் என நினைத்து அஜாக்கிரதையாக இருந்து விட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Techaer Ramani hacked to death case shocking info Crime


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->