சூதாட்டம் நிறுவனங்களுக்காக ஆளுநரை உழைக்கச் சொன்னது யார்..?? காங். எம்பி ஜோதிமணி கேள்வி..!!
Jothimani Questions who asked governor to work for gambling company
சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆதரவாக பாஜக செயல்படுகிறது..!!
ஆன்லைன் சூதாட்டம் நிறுவனங்களுக்கு ஆதரவாக தமிழக ஆளுநர் அர்.என் ரவி செயல்படுவதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "அவசர சட்டத்திற்கும் மசோதாவிற்கும் இடைப்பட்ட கால இடைவெளியில் என்ன நடந்தது. எதற்காக தமிழக மக்களின் நலனை புறக்கணித்துவிட்டு சூதாட்ட நிறுவனங்களின் நலனுக்காக ஆளுநர் ஆர்.என் ரவி வேலை செய்கிறார்.
இவ்வாறு தமிழக ஆளுநரை சூதாட்டம் நிறுவனங்களுக்கு ஆதரவாக உழைக்கச் சொல்லி வற்புறுத்தியது யார்? அவர் சார்ந்திருக்கும் கட்சியா? அவரை அனுப்பியுள்ள அரசாங்கமா? அந்தக் கட்சியில் இருக்கும் தலைவர்களா? தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையா? இதில் எது சூதாட்ட கம்பெனிக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை ஆளுநர் விளக்க வேண்டும்" என கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர் "தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் படித்து தானே கையெழுத்து போட்டார். அதே அவசரம் சட்டம் தானே மீண்டும் மசோதாவாக இயற்றப்பட்டுள்ளது. பிறகு ஏன் அவர் கையெழுத்திட மறுக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழக மக்களுக்கு துரோகம் விளைவிக்கின்ற, தமிழக மக்களின் எதிர்காலத்தை பாதிக்கின்ற சக்திகள் ஆளுநரின் அதிகாரத்தில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளனர் என்பது தெரிகிறது" என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
Jothimani Questions who asked governor to work for gambling company