சொந்த கட்சி எம்.எல்.ஏ.,வுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்த காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி.! - Seithipunal
Seithipunal


"ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும்போது அதனை தடுக்க முடியாவிட்டால், மகிழ்ச்சியாக அனுபவித்துக்கொள்ள வேண்டும் என்று பழமொழி உள்ளது” என்று, கர்நாடக சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ்குமார் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில், 

"மக்கள் பிரதிநிதிகள்  பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு குறித்து, இவ்வளவு மோசமாக பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கர்நாடக சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகரின் பாலியல் வன்புணர்வு குறித்த பேச்சு, அதை கேட்டு இன்றைய சபாநாயகர் சிரிப்பது இரண்டும்.கடுமையான கண்டனத்திற்குரியது.

காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை யார் சொன்னாலும் கண்டித்தே வந்திருக்கிறது. இப்பொழுதும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரின் பாலியல் வன்புணர்வு தொடர்பான கருத்தை கண்டித்திருப்பதை வரவேற்கிறேன்" என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jothimani warn to mla ramesh kumar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->