40% கமிஷன் பெறும் அரசு.. ஹெலிகாப்டரில் செல்லும் பணம்.. பகீர் கிளப்பும் ஜோதிமணி..!! - Seithipunal
Seithipunal


ராகுல் காந்தி குடியிருந்த அரசு பங்களாவை காலி செய்ய வைத்த மத்திய அரசை கண்டித்து கரூர் தொகுதியில் ஒரு லட்சம் வீடுகளில் "எனது வீடு ராகுல் வீடு' என்ற ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முத்தாலம்பட்டி பகுதியில் வீடுகள் தோறும் ஸ்டிக்கர் ஒட்டி பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் "கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முழு வீச்சில் பணியாற்றி வருகிறோம். தற்போதைய பாஜக தலைமையிலான கர்நாடகா அரசு மாநில முழுவதும் 40% கமிஷன் பெரும் அரசாக திகழ்ந்து வருகிறது. கர்நாடகாவில் ஊழலை தாங்கிக்கொள்ள முடியாமல் பல ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான அலை வீசுவதால் 150 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெறும்.

கர்நாடக தேர்தலில் பாஜக பணத்தை கொட்டுகிறது. கர்நாடக மாநில தேர்தல் இணை பொறுப்பாளராக உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஹெலிகாப்டரில் பயணித்து பணத்தை வாரி இறைத்து வருகிறார். கர்நாடகாவில் பாஜக நடத்திய நிகழ்ச்சியில் அம்மாநில முன்னாள் அமைச்சர் ஒருவர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாதியில் நிறுத்திவிட்டு கன்னட கீதத்தை ஒலிக்க செய்துள்ளார். அண்ணாமலை ஒரு தமிழராக அதை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். இது குறித்து கேட்டால் அந்தப் பாடலில் மெட்டு சரியில்லை என காரணம் கூறுகிறார்" என செய்தியாளர்கள் அண்ணாமலையை சாடியுள்ளார் ஜோதிமணி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JyothiMani accused bjp taking money by helicopter in Karnataka elections


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->